Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

10 January 2021

டிரெண்ட் ஆகும் Signal சிக்னல் ஆப். சிறப்பம்சங்கள் என்ன.? எப்படி பயன்படுத்துவது? முழு விளக்கம்

வாட்ஸ் அப் புறக்கணிக்கப்படுகிறதா? ஆப் ஸ்டோரில் இந்தியாவின் டாப் இலவச ஆப் ஆன சிக்னல் பயனாளர்கள் தகவல்களைச் சேகரிக்கும் முறையில் வாட்ஸ் அப் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ள நிலையில், சிக்னல் மெசேஜிங் ஆப்பின் மீது பலரின் கவனம் சென்றுள்ளது.

உலகம் முழுவதும் பெரும்பாலனவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மெசேஜிங் ஆப்பாக விளங்குகிறது வாட்ஸ் ஆப்.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமாக திகழும் வாட்ஸ் அப்
சமீபத்தில் தனது தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை

விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவந்தது. இதனடிப்படையில்
புதிய கொள்கை மற்றும் விதிமுறைகளை ஏற்காவிடில் வரும்
பிப்ரவரி 8ம் தேதி முதல் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டுவந்துள்ள இம்மாற்றங்கள் வாடிக்கையாளார்களிடையே எதிர்ப்பை சந்தித்து வருகிறது. தனிப்பட்ட தகவல்களை ஃபேஸ்புக் தனது பிற நிறுவன அப்ளிகேஷன்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் இந்த அப்டேட் மூலம் வாடிக்கையாளர்களின் பிரைவசி கேள்விக்குறியாகும் என
கூறப்படுகிறது.

இதன் காரணமாக வாட்ஸ் அப்பிற்கு பதிலாக பிளே ஸ்டோரில்
கிடைக்கும் பிற இலவச மெசெஞ்சர் ஆப்களின் மீது
வாடிக்கையாளர்கள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் சிக்னல் ஆப் தற்போது உலகின் பல நாடுகளிலும்
வாட்ஸ் ஆப்புக்கு மாற்றாக மக்களின் தேர்வாக உள்ளது.

‘தனியுரிமைக்கு வணக்கம் சொல்லுங்கள்’ என்ற
டேக்லைனுடன் 2014 முதலே செயல்பட்டு வரும் சிக்னலில்
தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வாட்ஸ் அப்
போலவே இதிலும் எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன் உள்ளது.
இன்னும் சொல்வதென்றால் வாட்ஸ் அப்பே அதன் எண்ட் டூ எண்ட்
என்கிரிப்ஷன் வசதிக்காக சிக்னலின் ப்ரோட்டோகாலை தான்
பயன்படுத்துகிறதாம்.


இதன் நிறுவனர் யார்?

வாட்ஸ் அப்பின் இணை நிறுவனர்களான பிரையன் ஆக்டன்
மற்றும் மர்லின் ஸ்பைக் ஆகியோர் அந்நிறுவனத்திலிருந்து
வெளியேறி 2017ல் சிக்னலை தொடங்கினர். அவர்கள் இதில் 50
மில்லியன் டாலர்களை முதலீடு செய்து உருவாக்கியுள்ளனர்.

சிக்னலின் சிறப்பம்சங்கள் என்ன?

இது முற்றிலும் ஒரு இலவச ஆப். இதன் மூலம் ஆடியோ, வீடியோ
கால்கள், குரூப் வீடியோ கால்கள் (150 பேர் வரை) செய்யலாம்.
புகைப்படங்கள், வீடியோ, லிங்குகள் அனுப்ப முடியும். வாட்ஸ் அப்
போலவே அனைத்தையும் இதில் மேற்கொள்ள முடியும்.

தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் வாட்ஸ் அப்
போல இதில் பயனர்களின் அனுமதியில்லாமல் குரூப்பில் சேர்க்க
முடியாது. இன்வைட் அனுப்பி அதனை அவர்கள் ஏற்றால் மட்டுமே
குரூப்பில் இணைய முடியும். சிக்னலில் disappearing
messages வசதியும் உள்ளது.

ஆண்ட்ராய்ட், ஆப்பிள், லினக்ஸ் என அனைத்து தளங்களிலும்
இதனை பயன்படுத்தலாம். டெஸ்க்டாப், லேப்டாப் அல்லது ஐபேடில் இதனை இணைத்து பயன்படுத்த முடியும். இருப்பினும் கூகுள் ட்ரைவில் இதனை பேக் எடுக்க முடியாது. பழைய போன் இருந்தால் மட்டுமே புதிய ஃபோனில் இதன் டேட்டாவை மாற்ற முடியும். மிகவும் முக்கியமானதாக சிக்னல் ஆப் நமது மொபைல் நம்பரை தவிர வேறெந்த தனிப்பட்ட தகவலையும் கேட்டுப்பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா உட்பட பல நாடுகளிலும் சிக்னலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கனிசமாக அதிகரித்து வருகிறது. பிளே ஸ்டோரில் இந்தியாவின் டாப் இலவச ஆப் என்ற நிலைக்கு சிக்னல் உயர்ந்திருப்பதே அதன் பிரபலத்தன்மையை எடுத்துரைப்பதாக இருக்கிறது

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES