கூகுள் பே,ஃபோன் பே போன்ற யுபிஐ பேமெண்ட் ஆப்கள் சில நாட்களுக்கு சரியாக இயங்காது என இந்திய தேசிய கட்டணக் கழகம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ அதாவது யூனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் -ஐ பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த சில நாட்களுக்கு மட்டும் சரியாக வேலை செய்யாது என தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அதன் டிஜிட்டல் கட்டண தளத்தை மேம்படுத்துவதால் அடுத்த சில நாட்களுக்கு மட்டும் IST நேரப்படி காலை 1 மணி முதல் வரை 3 மணி வரை பரிவர்த்தனைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்படுத்துதலில் முக்கியமாக UPI கேட்வே வழியாக BHIM அல்லது மூன்றாம் தரப்பு பேமெண்ட் ஆப்களான கூகுள் பே, பேடிஎம் மற்றும் ஃபோன்பே வழியாக குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு இடையில் பரிவர்த்தனை செய்யும் யூசர்கள் சிரமத்தை சந்திக்க நேரிடும். இருப்பினும் இந்த மேம்படுத்தல் செயல்முறைக்கான சரியான நாட்களை NPCI குறிப்பிடவில்லை. இது "அடுத்த சில நாட்களுக்கு" இருக்கும் என்று கூறியுள்ளது. சிறந்த, பாதுகாப்பான அனுபவத்தை யூசர்களுக்கு வழங்க UPI தளத்தை மேம்படுத்துவதாக கூறியுள்ளது.NPCI அமைப்பு ஒரு ட்வீட் மூலம் இந்த தகவலை பகிர்ந்து கொண்டது. அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, "யுபிஐ பரிவர்த்தனைகளின் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த கட்டமைப்பை உருவாக்க, யுபிஐ இயங்குதளம் அடுத்த சில நாட்களுக்கு காலை 1 மணி முதல் 3 மணி வரை மேம்படுத்தும் செயல்பாட்டின் கீழ் இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் NPCI வலைத்தளம் அனைத்து வகையான இணைய தாக்குதல்களுக்கும் எதிராக அதன் சொத்துக்கள் மற்றும் வலையமைப்பைப் பாதுகாக்க சில பாதுகாப்பு வழிமுறைகளை பயன்படுத்தியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. இது உலகளவில் டேட்டா பிரைவசி மற்றும் பாதுகாப்பைச் சுற்றியுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளுக்கு ஏற்ப டேட்டா பாதுகாப்பு கொள்கையையும் இணைத்துள்ளது. இந்த பாதுகாப்பு கொள்கை கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் NCPI இணையதளத்தில் கிடைத்த தகவலின்படி, தற்போது 165 வங்கிகள் BHIM UPI இயங்குதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியை மேம்படுத்துவதற்காக பல மூன்றாம் தரப்பு டிஜிட்டல் கட்டண பயன்பாடுகள் யுபிஐ அடிப்படையிலான கொடுப்பனவுகளை அறிமுகப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்திய NPCI தரவுகளின்படி, ஃபோன்பே தளமானது கூகுள் பேவை விஞ்சி கடந்த 2020 டிசம்பர் காலகட்டத்தில் இந்தியாவில் முன்னணி யுபிஐ பயன்பாடாக மாறியுள்ளது.
வால்மார்ட் -க்கு சொந்தமான ஃபோன்பே-வில் சுமார் 902.03 மில்லியன் வாடிக்கையாளர்கள் இதுவரை மேற்கொண்ட பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.182,126.88 கோடி ஆகும். மறுபுறம், கூகுள்பே இரண்டாவது இடத்திற்கு சரிந்தது. இதுவரை 854.49 மில்லியன் வாடிக்கையாளர்கள் கூகுள்பே-வில் மேற்கொண்ட பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.176,199.33 கோடி என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மூன்றாம் தரப்பு பயன்பாட்டு வழங்குநர்கள் யுபிஐ பரிவர்த்தனைகளின் மொத்த அளவிலிருந்து 30 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்ற புதிய என்.பி.சி.ஐ வழிகாட்டுதலின்படி இந்தியாவில் நேரலையில் உள்ளது. இந்த வழிகாட்டல் ஃபோன்பே, கூகுள் பே, பேடிஎம் மற்றும் மொபிக்விக் உள்ளிட்ட ஆஃப்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றன. இருப்பினும் தற்போதுள்ள மூன்றாம் தரப்பு யுபிஐ இயங்குதளங்கள் ஒரு கட்டமாக இணங்க வேண்டும். அதேசமயம், புதிதாக நுழைபவர்கள் இப்போதே UPI CAP வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE