Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

26 January 2021

பகுதிநேர ஆசிரியர்கள் முதல்வரிடம் மனு

முதல்வரிடம் மனு:

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை உள்ளிட்ட 12000 பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

மாதத்தில் 12 அரை நாள் பணிபுரிவதால், மாணவர்களுக்கு கல்வி போதிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இருப்பினும் இவர்கள் தங்கள் திறமையினால், மாணவர்கள் பல்வேறு சாதனைகள் புரிய காரணமாக இருக்கின்றனர்.

10 கல்வி ஆண்டாக (2012 முதல்) பணிபுரியும் இவர்களுக்கு, ரூ.7700 மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஊதியம் வழங்கப்படுவ


தில்லை.

விலைவாசி உயந்தபோதிலும், இவர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படவில்லை.

குறைந்த ஊதியத்தில் வாழ்க்கையை நடத்த முடியாமல், பலர் வறுமையில் வாடி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர், பலர் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர்.

இவர்களுக்கு அரசு ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடிய, எந்த சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.

குறிப்பாக பணி இடமாறுதல், மகப்பேறு விடுப்பு, ஊதிய உயர்வு, இறந்தவர்களுக்கு வழங்கப்படும் பணபலன்கள் போன்றவையாகும்.

எனவே மாணவர்கள் மற்றும் 12000 குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு, இவர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம், பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி மனு கொடுத்தனர்

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES