பாடத்திட்டம் குறைப்பு:
கொரோனா பரவல் காரணமாக கடந்த வருட மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. மாணவர்களுக்கு தேர்வுகள் மற்றும் வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக எடுக்கப்பட்டது. பின்னர் தொற்று குறைந்த காரணத்தாலும், பொதுத்தேர்வுகள் நெருங்கி வருவதாலும் நேரடி வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி 19ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
மேலும் மாணவர்களின் பாடசுமையை குறைக்க 35% பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. கடினமான பகுதிகள் பாடத்திட்டத்தில் இருந்து குறைக்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். தற்போது 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று தெரிவித்தார்.
இந்நிலையில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு மற்றும் குறைக்கப்பட்ட பாடத்திட்ட விபரங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE