மாநில ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பிப்., 6ல் உண்ணாவிரதம் இருக்க தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

மதுரையில் சங்க மாநில தலைவர் குமார் கூறியதாவது: அரசு பணியாளர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியமும், பணிக்கொடையும் வழங்கப்பட ஏதுவாக மாநில ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி,வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நுாலகர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை சம்பளம் பெறுவோரை முழுநேரப் பணியாளர்களாக்கி வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும்.
அரசின் அனைத்துதுறைகளிலும் பணிபுரியும் திட்ட பணியாளர்கள் தினக்கூலி, தொகுப்பூதிய, ஒப்பந்த, வெளி ஆதார பணியாளர்களுக்கு நிரந்தர பணியாளர்களுக்கு இணையான சம்பளம், விடுப்பு வழங்க வேண்டும். இக்கோரிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி உடனடியாக அரசு பணியாளர்களை அழைத்து பேசி தீர்வு காண கோரி ஜன., 21 முதல் பிப்., 5 வரை அனைத்து அரசு அலுவகங்களிலும் பிரசார இயக்கம் நடத்தப்படும். ிப்.6ல் சென்னையில் உண்ணாவிரதம் நடக்கும். இதுகுறித்து மாநில நிர்வாகிகள் காணொலி காட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார். மாவட்ட தலைவர் ஜெயகணேஷ் உடனிருந்தார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE