தமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் பத்தாம் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கப்பட உள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைசெய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, பள்ளிகள் திறக்கும் முன், பின் என இருமுறை கிருமிநாசினி மூலம் பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்படும். மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில், ஒரு மேஜைக்கு 3 மாணவர்கள் என ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவர். 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
பள்ளிக்கு வரவேண்டிய நேரம், ஒவ்வொரு குறிப்பிட்ட 25 மாணவர்களுக்கும் ஐந்து நிமிட இடைவெளி இருக்கும். அப்போது, மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்து அனுமதிக்கப்படுவர்.
அவர்கள் வீட்டிற்கு செல்லும்போதும் அதே நடைமுறை பின்பற்றப்படும். ஒவ்வொரு மாணவர்களின் உடல்நிலை, பள்ளிக்கு வரும் மற்றும் வீட்டிற்கு செல்லும் நேரம் ஆகியவை குறித்து தினசரி கண்காணிப்பு ஆசிரியர்கள் தலைமையாசிரியருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அவர், மாநகராட்சிக்கு அறிக்கை அளிப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE