
இவர், கிண்டி, கிங் ஆய்வக வளாகத்தில், தனி அறையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என, மொத்தம், 44 பேரின் மாதிரிகள், மஹாராஷ்டிராவின், புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அதில், 12 பேரின் பரிசோதனை முடிவுகள் நேற்று தெரிய வந்தன. அதில், மூன்று பேருக்கு, அதிக வீரியம் கொண்ட உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பிரிட்டனில் இருந்து வந்த, நான்கு பேருக்கு, புதிய வகை கொரோனா இதுவரை உறுதி செய்யப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE