கோப்புப்படம்)
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் தானா கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம் பட்டேல். இவர் தெருவோர உணவு விற்பனை தொழில் செய்து வருகிறார். இவரது மகன் 4-வது படித்து வந்தான்.
செல்போனில் ஃப்ரீ ஃபையர் விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளான். அவனது தந்தை எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. இறுதியாக மகனிடம் இருந்து இருந்து அவரது தந்தை செல்போனை வாங்கிக்கொண்டு விளையாட கொடுக்கவில்லை.
இதனால் பைத்தியம் பிடித்தது போன்று இருந்த அந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். செல்போன் விளையாட்டால் மகனை பறிகொடுத்த சீதாராம் பட்டேல் கூறுகையில் ‘‘நான் விளையாடக்கூடாது என்று அவனிடம் இருந்து சொல்போன்னை வாங்கிய போதெல்லாம் விரக்தியடைந்தான். இதேபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெற நான் விரும்பவில்லை. இதுபோன்ற விளையாட்டுகளை அரசு தடைசெய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள்’’ என கண்ணீரம் தழும்ப தெரிவித்தார்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE