Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

04 January 2021

குரூப்-1 முதல்நிலை தேர்வில் இடம்பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் தொடர்பான கேள்வி


குரூப் 1 தேர்வில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்தது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) துணை கலெக்டர் (18), துணை போலீஸ் சூப்பிரண்டு (19), வணிக வரித்துறை உதவி கமி‌‌ஷனர் (10), கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (14), ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (4), தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் மாவட்ட அதிகாரி (1) என குரூப்-1 பதவியில் அடங்கிய 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி வெளியிட்டது.



இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 19-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏராளமானோர் போட்டி போட்டு விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 66 காலிபணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 முதல்நிலை தேர்வு இன்று நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழகம் முழுவதும் 856 மையங்களில் 2.57 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், இன்று கேட்கப்பட்ட குருப் 1 வினாத்தாளில் கடந்த 2018-ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அந்தக் கேள்வியானது, “தலைசிறந்த படைப்பான “ பரியேறும் பெருமாள்” என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்” என அமைந்துள்ளது.


இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அந்தப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், “ “பரியேறும் பெருமாள் என்கிற படைப்பின் நோக்கம் முழுமையடைந்தது ;இது மானுட சமூகத்தின் பிரதி’ ” என்று அவரது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவைத் தவிர பெரியார், காமராஜர், அம்பேத்கர், திராவிடம், கீழடி, வேள்பாரி, தமிழர் நாகரிகம் தொடர்பான கேள்விகளும் இடம்பெற்று இருந்தன.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES