புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் அரசு ஊழியர்களை ஏமாற்றுகின்றன''என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:புதிய நலவாழ்வு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியர்களுக்கு மாதந்தோறும் ரூ.180 பிடித்தம் செய்கிறது. 2016 முதல் 2020 வரை பல நோய்களின் ஆப்பரேஷனுக்கு ரூ.4 லட்சம் வரை என்றும் குறிப்பிட்ட சில ஆப்பரேஷன்களுக்கு ரூ.7.50 லட்சம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த காப்பீடு திட்டம் 2020 ஜூலை முதல் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு கொரோனா உள்பட பல்வேறு நோய்கள் இணைக்கப்பட்டது.இத் திட்டத்தில் ஊழியர்களுக்கான சிகிச்சைக்கான முழுக்கட்டணம் வழங்காமல் மருத்துவ செலவில் 25 முதல் 50 சதவீத மட்டுமே வழங்கப்படுகிறது.
கொரோனாவிற்கும் சிகிச்சை அளிக்க மறுக்கின்ற
னர். இதனால் அரசு ஊழியர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அரசின் நல்ல திட்டத்தில் ஏமாற்றப்படுகின்றனர். 12 லட்சம் அரசு ஊழியர்களின் நலனை கருதி கட்டணமில்லா சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE