தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு எந்த நேரமும் அரசு தயார் நிலையில் உள்ளதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட பள்ளிகளை நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக, பள்ளி, கல்லூரிகளை தற்போது திறக்க கூடாது என்று அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.மேலும், ஒரே இடங்களில் கூடவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், கோவில்கள், வணிக வளாகங்கள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் கல்வி கூடங்கள் ஆகியவை மூடப்பட்டது. இதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.மேலும், 8 மாதங்களுக்கு பிறகு இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதனால், பள்ளிகள் திறப்பது பற்றிய அறிவிப்பு எப்போது வேணாலும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கல்வி மூலம் அதிக கட்டணம் வசூலித்த 10க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE