பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்குமா, ரத்தாகுமா என்ற கேள்வி மாணவர்களிடம் இருந்துவரும் நிலையில், அதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ’வெளிநாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் வருவதாக கூறினாலும், ஆலயங்கள் திறக்கப்பட்டு வழிபாடு நடத்த அரசு அனுமதித்துள்ளது என்றார். அரசுப் பள்ளியில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது என்றும் அரசு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முதலமைச்சரிடம் பேசி நல்ல முடிவெடுக்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி அறிவிக்கப்பட்டது என்றும், இந்தாண்டு நிலைமை வேறு எனவும் கூறினார். தற்போதைய அதிமுக ஆட்சி மே 24 ம் தேதி முடிவடைவதால் அதற்கு முன் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து நல்ல முடிவு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தாண்டு 11 புதிய மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் வருவதாக கூறினாலும், ஆலயங்கள் திறக்கப்பட்டு வழிபாடு நடத்த அரசு அனுமதித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். விவசாயிகள், தொழிலதிபர்கள், மாணவர்கள் இந்த ஆட்சியில் மகிழ்ச்சியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி
JOIN OUR
>"Kindly share to all"<
அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை kalvitamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் ,உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்....
Teachers can send their Materials to kalvitamilnadu@gmail.com [or] Whatsapp – 9444555775
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE