தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஏஎன்பிஆர் என்ற தானியங்கி கேமரா மூலம் படம் பிடித்து அபராதம் விதிக்கும் நடைமுறை நேற்று முதல் சேலம் மாநகரில் செயல்பாட்டிற்கு வந்தது. இதன் செயல்பாட்டினை தொடங்கி வைத்து பார்வையிடும் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார்.
.இந்த கேமரா மூலம் போக்குவரத்து விதி முறை மீறும் வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு, உடனடியாக குறுந்தகவல் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறையை நேற்று மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தொடங்கிவைத்தார்.
வாகன ஓட்டிகள் வாகன விதி மீறல்களில் ஈடுபடும் பட்சத்தில், ஹெல்மெட் அணியாமல், இரண்டு சக்கர வாகனத்தில் மூவர் செல்லுதல், கார்களில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்.
தானியங்கி கேமரா படம் பிடித்து, ஆதாரத்துடன் தொடர்புடைய வாகன ஓட்டிகளின் அலைபேசி எண்ணுக்கு குறுந்தகவலுடன், அபராத தொகை அனுப்பி வைக்கப்படும். விதிகளை மீறுபவர்கள் ஆன்-லைன் மூலம் அபராத தொகையை செலுத்த வேண்டும்.
தவறினால், வாகனங்களுக்கான புதுப் பித்தல், இன்சூரன்ஸ் புதுப் பித்தல் உள்ளிட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்படும். எனவே, வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்,’ என்றார்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE