திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டதன் காரணமாக இளநிலை இறுதியாண்டு மாணவர்கள் 1,200 பேரும் கல்லூரிக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்தவாறு ஆன்லைன் மூலமாக பாடங்களை படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முதல் கல்லூரிகளில் பல்கலைக்கழகத்தின் முதல் பருவ தேர்வு துவங்கியுள்ளது. ஆன்லைன் மூலமாக நடைபெறும் இந்த தேர்வில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள் வீடுகளிலேயே தேர்வினை எழுதுமாறு பல்கலைக்கழகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவாரூர் அரசு கல்லூரிக்கு மாணவர்கள் நேற்று காலை வந்தனர். உள்ளேயே தேர்வை எழுதுவோம் என நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இதற்கு கல்லூரி நிர்வாகம், அனுமதி மறுத்தனர். இதனால் மாணவர்கள், கல்லூரி முன் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து தேர்வு எழுத துவங்கினர். பிற்பகல் 1.35 முதல் 2.05 மணி வரை தேர்வு எழுதி கொண்டிருந்ததால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த திருவாரூர் தாலுகா போலீசார், கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கல்லூரிக்குள் தேர்வு எழுதுவதற்கு மாணவர்களை அனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE