நாளை வலுப்பெறும் புயலால் 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்..
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுப்பெறும் என்று தெரிவித்தார். புரெவி என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 2ஆம் தேதி மாலை அல்லது இரவில் இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரக் கூடும். இதனால் நாளை தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழையும், புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் அடுத்த மூன்று தினங்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE