கூகுள் பே, பேடிஎம் போல் தபால் துறையின் பணப்பரிமாற்றசெயலிபண பரிமாற்றம் செய்ய ஏற்கனவே கூகுள்பே, பேடிஎம், போன்பே உள்ளிட்ட செயலிகள் இருக்கின்றன என்பதும் அவை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதும் இதன் மூலம் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது கூகுள்பே, பேடிஎம் போலவே இந்திய தபால் துறையும் தங்களிடம் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு என ஒரு புதிய பண பரிமாற்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது
இந்த செயலியின் பெயர் ’டாக்பே’ இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் கூறியபோது ’டாக்பே’ என்ற இந்த செயலின் மூலம் தபால் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் உறவினர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்
அதுமட்டுமின்றி கடைகளில் பொருட்கள் வாங்கிவிட்டு இந்த செயலில் இருக்கும் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்து மின்னணு முறையில் பணம் அதெல்லாம் என்று அவர் கூறியுள்ளார் கூகுளே போலவே தங்களுக்கும் ஒரு சிறப்பு வசதி கிடைத்துள்ளதை அடுத்து தபால் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE