Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

30 December 2020

வருமான வரி செலுத்த நாளை கடைசி நாள்.

வருமான வரி செலுத்த நாளை கடைசி நாள்.. கடைசி நேரம் வரையில் காத்திருக்காதீர் என அறிவுறுத்தல்..

வணிகத்துக்கு (Business) ITR -3 மற்றும் ITR 6 படிவங்களை மூலம் வருமானவரி தாக்கல் செய்யலாம், அதே நேரத்தில் ITR -2 படிவம் மூலம் குடியிருப்பு சொத்திலிருந்து வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த வேண்டும்.




2019 -20-ஆம் ஆண்டுக்கான வருமான வரி (income tax) செலுத்துவதற்கான தேதி நாளையுடன் நிறைவடைய இருப்பதால், வரி செலுத்துவோர் கடைசி நேரம் வரை காத்திருக்க வேண்டாம் என வருமானவரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2019 -20ம் ஆண்டுக்கான வருமான வரி (income tax) செலுத்தும் தேதி முதலில் ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழக்கையின் நிலைமை சீரடையாததால் அக்டோபர் மாதம் வரை அவகாசம் கொடுக்கப்பட்டு, பின்னர் டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், வருமான வரி (income tax) செலுத்துவதற்கான கடைசி தேதி நாளையுடன் நிறைவடைகிறது. இதுகுறித்து டிவிட்டரில் வரி செலுத்துவோருக்கு நினைவூட்டியுள்ள வருமானவரித்துறை, இதுவரை வருமானவரி செலுத்தாதவர்கள் நாளைக்குள் வரி செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

கடைசி நேரம் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே வரி செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், வரி செலுத்துவோருக்கு ஏற்ப ஒரு சில சலுகை தேதிகளையும் வருமானவரித்துறை அறிவித்துள்ளது. தணிக்கை செய்யப்படாத தனி நபர் வருமானவரியை அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதிக்குள் செலுத்தலாம் என கூறியுள்ளது. இதேபோல், ஒரு லட்சம் ரூபாய்க்கும் மிகாமல் வருமான வரி செலுத்துவோரும் ஜனவரி 31,2021-க்குள் வரி செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிவிட்டரில் கூறியுள்ள மத்திய நேரடி வரிகள் கட்டுப்பாட்டு மையம் (The Central Board of Direct Taxation), நாளையுடன் 2019 -20ம் ஆண்டுக்கான வரி செலுத்தும் காலவகாசம் முடிவடைய உள்ளதாக கூறியுள்ளது. வருமானவரி செலுத்துவோர், அந்த அறிவிப்பை கருத்தில் கொண்டு இதுவரை வரிசெலுத்தாமல் இருந்தால் உடனடியாக வரி செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. டிசம்பர் 21ம் தேதி வரை நாடு முழுவதும் 4.23 கோடி பேர் வரி தாக்கல் செய்துள்ளதாக வருமானவரித்துறை (income tax) தெரிவித்துள்ளது.

50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் வருவாய் ஈட்டிய தனிநபர்கள், வருமானவரித்துறை படிவம் ITR-1 -ஐ பயன்படுத்தி வரி செலுத்த வேண்டும். எல்.எல்.பி ( LLP) தவிர பிற குடியிருப்பாளர்கள், எச்.யு.எஃப், நிறுவனங்கள், வணிகம் மற்றும் தொழிலில் கிடைக்கும் கூடுதல் வருமானம் ஆகியவற்றின் மொத்த வருமானம் ரூ .50 லட்சம் வரை வருவாயாக ஈட்டுவோர் ITR-4 Sugam படிவம் மூலம் வருமானவரி செலுத்தலாம்.வணிகத்துக்கு (Business) ITR -3 மற்றும் ITR 6 படிவங்களை மூலம் வருமானவரி தாக்கல் செய்யலாம், அதே நேரத்தில் ITR -2 படிவம் மூலம் குடியிருப்பு சொத்திலிருந்து வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த வேண்டும்.

 ITR-5 படிவம் மூலம் எல்.எல்.பி மற்றும் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் (LLP and Association of Persons) வரி செலுத்த வேண்டும். ஐடிஆர் -7 படிவத்தைப் பயன்படுத்தி தொண்டு நிறுவனம் அல்லது மதம் சார்ந்த அமைப்புகளின் மூலம் வருவாய் ஈட்டும் தனிநபர்கள் வரி செலுத்தலாம். வருமானவரியை விரைவாக செலுத்துவதற்கான நடைமுறைகளையும் வருமானவரித்துறை எளிமைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

kalvitamilnadu.com

🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி

JOIN OUR 


WHATSAPP GROUP


TELEGRAM GROUPS


>"Kindly share to all"<


அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை kalvitamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் ,உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்....

Teachers can send their Materials to kalvitamilnadu@gmail.com [or] Whatsapp – 9444555775

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES