தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு முன் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும், என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது
file photo |
.
சங்க மாநில தலைவர் பீட்டர் ராஜா, பொது செயலாளர் ராஜூ தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் இக்கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் புதிதாக 5.18 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதன் அடிப்படையில் கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள் திறப்பதற்கு முன் தலைமையாசிரியர் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி அவர்கள் பணியில் சேரும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பல முதன்மை கல்வி அலுவலகங்களில் சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் பணியிடம் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப வேண்டும், என தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE