கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் 60 ஆன்லைன் கடன் அப்ளிகேசன்களும் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்படவில்லை. எனவே இந்த கடன் அப்ளிகேசன்களின் செயல்பாடுகள் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படாதவை

.
இந்த கடன் அப்ளிகேசன்களை பயன்படுத்தும் பொதுமக்களின் செல்போன் தகவல்கள் அனைத்தையும் சேகரித்து அவை தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. பொதுமக்களின் தனிப்பட்ட உரிமைகளை மீறும் வகையில் இது அமைந்துவிடும்.
இது போன்ற கடன் அப்ளிகேசன்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட ரகசியங்கள், ஆதார் மற்றும் தனது வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களை இது போன்ற கடன் அப்ளிகேசன்களில் கொடுக்க வேண்டாம்.
* பொதுமக்கள், இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத கடன் அப்ளிகேசன் துறையினரிடம் இருந்து மிரட்டல், அச்சுறுத்தல் ஏதேனும் வந்தால் உடனே போலீசில் புகார் கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
* இது போன்ற கடன் அப்ளிகேசன்களின் உண்மைத்தன்மை பற்றி ரிசர்வ் வங்கியின் வலைதளத்தில் சரிபார்த்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE