இன்ஜினியரிங் பட்டமளிப்பு விழாவில் முதலிடம் பெற்ற, 69 மாணவர்களுக்கு, ஹால் மார்க் முத்திரையுடன் கூடிய, 690 கிராம் தங்கம் கொள்முதல் செய்ய, அண்ணா பல்கலை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


அண்ணா பல்கலை வளாக கல்லுாரிகள், உறுப்பு கல்லுாரிகள் மற்றும் இணைப்பு கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் டிசம்பரில் பட்டமளிப்பு விழா நடத்தப்படும்.இந்த ஆண்டு, ஜனவரிக்குள் பட்டமளிப்பு விழாவை நடத்த, பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் துவங்கியுள்ளன. இந்த ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில், மொத்தம், 69 மாணவர்களுக்கு முதலிடத்துக்கான தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது; தலா, 10 கிராமில், 69 பதக்கங்கள் தயார் செய்யப்பட உள்ளன. இதற்காக, 916 ஹால்மார்க் முத்திரையுள்ள, 22 காரட் தங்கம் கொள்முதல் செய்ய, பல்கலை சார்பில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம், 38 லட்சம் ரூபாய் மதிப்பில், 690 கிராம் தங்கம் வாங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பதக்கத்திலும், பல்கலையின் முத்திரை, மாணவ - மாணவியரின் பெயர், பாடப்பிரிவு ஆகியவற்றுடன், லேசர் தொழில்நுட்பத்துடன் பதக்கத்தை உருவாக்க, பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE