நவீன தொழில்நுட்பம் குறித்து, கல்லுாரி பேராசிரியர்கள், 5,000 பேருக்கு, தகவல் தொழில்நுட்ப துறை சார்பில், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தமிழக உயர்கல்வி துறையில் இருந்து, அனைத்து இன்ஜினியரிங் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தொழில் துறை வளர்ச்சியில், தகவல் தொழில்நுட்ப துறை முக்கிய பங்காற்றுகிறது. ஒவ்வொரு துறையினரும் தொழில்நுட்ப மாற்றங்களை தெரிந்து, அதை அமல்படுத்த வேண்டும். அந்த வகையில், மெஷின் லேர்னிங், கிளவுட் கம்ப்யூட்டிங், பிளாக் செயின், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் போன்ற துறைகளில், அதிக ஆட்கள் தேவை.
எனவே, இந்த துறையில் மாணவர்களை அதிகமாக உருவாக்கும் வகையில், அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கு, முதற்கட்டமாக கற்பித்தல் பணியில் உள்ள கல்லுாரி பேராசிரியர்கள், 5,000 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சிக்கு தேவையான புத்தகங்கள் பேராசிரியர்களுக்கு வழங்கப்படும். தமிழகம் முழுதும், கல்லுாரி வாரியாக இந்த பயிற்சியை நடத்த வேண்டும்.இதற்கு, தகவல் தொழில்நுட்ப துறை தேவையான வசதிகளை செய்து தரும். எனவே, இந்த பயிற்சியை பேராசிரியர்கள் பெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE