ஜேஇஇ தேர்வுகள் இனி 4 முறை நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

ரமேஷ் பொக்ரியால்
நாடு முழுவதிலும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். இந்தத் தேர்வு முதன்மைத் தேர்வு, அட்வான்ஸ் தேர்வு என்று இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.
ஜேஇஇ தேர்வுகள் இனிமேல் 4 முறை நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் பொக்ரியால் தெரிவித்துள்ளா்.
இதுகுறித்து பொக்ரியால் கூறும்போது ‘‘பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும். நான்கு தேர்வுகளிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாணவர்கள் பங்கேற்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE