2020 - 2021 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் தன்னிறைவு திட்டத்துக்காக 25 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஊரக மற்றும் நகர்புறங்களில் சமுதாய சொத்துக்களை மக்கள் பங்களிப்புடன் உருவாக்கி பராமரிப்பதற்கு 2011-2012 ஆம் ஆண்டு முதல் தன்னிறைவுத் திட்டம் என்னும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இதனை பரிசீலித்த அரசு, 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் பணிகள் குறித்த விவரங்களை 3 நிலைகளாக பிரித்து புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு 2020-21 ஆம் நிதி ஆண்டுக்கு 50 கோடி நிதி ஒதுக்க ஊரக வளர்ச்சி துறை ஆணையர் அரசுக்கு பரிந்துரைத்திருந்தார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE