அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும், 'பாஸ்டேக்' கட்டாயம் உட்பட, பல புதிய நடைமுறைகள், வரும், ஜன., 1 முதல் அமலுக்கு வர உள்ளது.வரும், ஜன., 1 முதல் அமலுக்கு வர உள்ள புதிய மாற்றங்கள்:
* மின்னணு முறையில், சுங்க கட்டணம் செலுத்துவதற்கான, 'பாஸ்டேக்' ஸ்டிக்கர் இருப்பது, அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
* இனி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகைக்கான காசோலைக்கு, 'பாசிடிவ் பே' என்ற புதிய முறை கட்டாயமாகிறது.
அதன்படி, அந்த காசோலையின் எண், யாருக்கு வழங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விபரங்களை, வங்கிக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்
* கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை, 'ஸ்வைப்பிங் மெஷினில்' செலுத்தாமலேயே, பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பு, 2,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இது சுய விருப்பத்தில் அவரவர் பதிவு செய்து கொள்ளலாம்
* ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கணக்குகளை தற்போது, மாதந்தோறும் தாக்கல் செய்ய வேண்டும். 5 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யும் நிறுவனங்கள், இனி, காலாண்டுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்தால் போதும். இதனால், 94 லட்சம் பேர் பயன் பெறுவர்
* வரும், ஜன., 15ம் தேதி முதல், தொலைபேசிகளில் இருந்து, மொபைல் போன்களை அழைக்கும்போது, அந்த எண்ணுக்கு முன், பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும்
* 'வாட்ஸ்ஆப்' சமூக வலை தளம், சில குறிப்பிட்ட மொபைல் போன்களில் செயல்படாது
* பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள்,ஜன., 1 முதல், கார்களின் விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன. இடுபொருள் செலவு அதிகரித்துள்ளதால், இந்த விலையேற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE