Whastsapp | வாட்ஸ்அப்பில் டெலிட் செய்த செய்தியை என்னவென்று நாம் பார்க்க வேறுசில வழிகளால் முடியும்.
உலகளவில் தகவல் பரிமாற்றம் செய்யப்படும் செயலில் வாட்ஸ்அப் முதலிடத்தில் உள்ளது. சொந்த பயன்பாடு மட்டுமில்லாமல் அலுவலகம், கல்வி என அனைத்து தகவல் பரிமாற்றத்திற்கும் வாட்ஸ்அப் தான் முன்னிலையில் உள்ளது. காலத்திற்கேற்ப வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் கொண்டு வரப்பட்டு கொண்டே இருக்கின்றன.
அதன்படி நாம் அனுப்பிய செய்தியில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை நிரந்தரமாக டெலிட் செய்யும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்திருந்தது. இந்த வசதியின் படி நாம் ஒரு செய்தியை நிரந்தரமாக டெலிட் செய்துவிட்டால் அனுப்பவட்டவருக்கும் நாமும் மீண்டும் அந்த மெசேஜை பார்க்க முடியாது.
ஆனால் வாட்ஸ்அப்பில் டெலிட் செய்த செய்தியை என்னவென்று நாம் பார்க்க வேறுசில வழிகளால் முடியும். அதற்கு வேறொரு செயலியை நீங்கள் உங்களது ஆன்டராய்டு மொபைலில் பதவிறக்கம் செய்ய வேண்டும். அந்த செயலியை பதிவிறக்கம் செய்வது உங்களது சொந்த விருப்பமாகும்.
வாட்ஸ்அப்பில் டெலிட் செய்த மெசேஜை மீண்டும் பார்ப்பது எப்படி?
முதலில் நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் WhatsRemoved+ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
அந்த செயலியை பதிவிறக்கம் செய்த பின் அது கேட்கும் தகவல்களுக்கு அனுமதி வழங்கவும்அதன்பின் முகப்பு பக்கத்தில் இருக்கும் பட்டியலில் வாட்ஸ்அப்பை தேர்வு செய்யவும்.
அதைதொடர்ந்து திரையில் வரும் save files என்பதை தேர்வு செய்வதன் மூலம் செயலி பயன்பாட்டிற்கு வந்துவிடும்.
தற்போது வாட்ஸ்அப்பில் உள்ள மெசேஜ் முதல் டெலிட் செய்த அனைத்து மெசேஜ்களும் WhatsRemoved+ செயலியில் வந்துவிடும்.
ஆண்ட்ராய்டு போன்களுக்கு மட்டுமே இதைப் போன்ற ஆப்ஷன் உள்ளது. ஆப்பிள் போன்களுக்கு இதைப் போன்ற எந்த செயலியும் இல்லை. மேலும் ப்ளே ஸ்டோரில் இதுப்போன்று பல் ஆப்கள் இருந்தாலும் இதற்கு பலர் சிறந்த ரேங்க்கிங் கொடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE