வாட்ஸ் ஆப் செயலி ஊடாக நாள்தோறும் பில்லியன் கணக்கான குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பன பரிமாறப்படுகின்றன. இவற்றில் பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஸ்பாம் குறுஞ்செய்திகளும் அடங்கும்.
இதனைத் தவிர்ப்பதற்கு புதிய Report வசதி வாட்ஸ் ஆப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வசதியின் ஊடாக குறித்த ஸ்பாம் குறுஞ்செய்தி மற்றும் அச் செய்தியை பரிமாற்றம் செய்த தொலைபேசி இலக்கம் தொடர்பில் Report செய்ய முடியும்.
எனினும் குறித்த செய்தி ஸ்பாம் என்பதை தகுந்த ஆதாரத்துடன் நிரூபித்தால் மாத்திரமே அது தொடர்பில் வாட்ஸ் ஆப் நடவடிக்கை எடுக்கும். இப்புதிய வசதியானது 2.20.206.3 வாட்ஸ் ஆப் பதிப்பில் கிடைக்கப்பெறுகின்றது.
எனினும் குறித்த செய்தி ஸ்பாம் என்பதை தகுந்த ஆதாரத்துடன் நிரூபித்தால் மாத்திரமே அது தொடர்பில் வாட்ஸ் ஆப் நடவடிக்கை எடுக்கும். இப்புதிய வசதியானது 2.20.206.3 வாட்ஸ் ஆப் பதிப்பில் கிடைக்கப்பெறுகின்றது.
அன்ரோயிட் பயனர்கள் இப் பதிப்பினை தற்போது பெற்றுக்கொள்ள முடிவதுடன், iOS பயனர்கள் இன்னும் சில வாரங்களில் இப் புதிய பதிப்பினை பெற்றுக்கொள்ள முடியும்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE