
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லுாரி இயற்பியல் துறை மாணவர் தனுஷ்குமார் சோலார் மூலம் இயங்கும் சைக்கிளை வடிவமைத்துள்ளார்.மணிக்கு 30 கி.மீ., செல்லும் இச்சைக்கிள் 24 வோல்ட் மற்றும் 26 ஆம்பியர் பேட்டரி மூலம் இயங்க கூடியது. ரீசார்ஜ் வசதி உள்ளது.
இதில் பயன்படுத்தக்கூடிய சூரிய தகடு 24 வோல்ட் மற்றும் 12 ஆம்பியர் கொள்ளளவு கொண்டதால் சூரிய தகடு மூலம் 50 கி.மீ., வரை இயக்க முடியும். மாணவரை கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
தனுஷ்குமார் கூறியதாவது: வடிவமைக்க 3 மாதங்கள் ஆகின. முதலில் பேட்டரி மூலம் இயக்கி பின் சோலாரில் இயங்குவதாக மாற்றப்பட்டது. சூரிய சக்தியும் குறையும் போது சாதாரண சைக்கிளாகவும் பயன் படுத்தலாம்.
தயாரிப்பு செலவு ரூ.25 ஆயிரம் ஆகிறது. பெட்ரோல் விலை அதிகரிப்பிற்கு இதை ஒரு மாற்றாக பயன்படுத்தலாம்.தயாரிப்பு செலவை குறைக்க முயற்சிப்பேன். ஸ்பீடுக்கு தகுந்து தயாரிப்பு செலவு அதிகரிக்கும், என்றார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE