
சென்னை: மருத்துவ படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஐகோர்ட்டில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. ஓ.பி.சி இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில சுகாதார செயலாளர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். மத்திய, மாநில சுகாதார செயலாளர்கள் உள்பட 9 பேருக்கு எதிராக ஐகோர்ட்டில் திமுக வழக்கு தாக்கல் செய்துள்ளது.
மருத்துவ படிப்பில் ஓ.பி.சி-யினருக்கு இடஒதுக்கீடு தருவது தொடர்பாக குழு அமைக்கப்படவில்லை என்று புகார் கூறியுள்ளனர். 50% ஒதுக்கீடு வழங்கக்கோரி திமுக, கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக, தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மருத்துவ மேற்படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50% ஒதுக்கீடு வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE