Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

29 November 2020

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு தர கோரிக்கை





சென்னை:'பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின், மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:கடந்த, 2012ல், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்களை, 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில், ஜெயலலிதா நியமித்தார்.தற்போது, 12 ஆயிரம் பேர் மட்டும் பணி புரிகின்றனர். அவர்களுக்கு, 7,700 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.அதாவது, 2014 மற்றும் 2017ம் ஆண்டுகளில், அனைவருக்கும் கல்வி இயக்க தொகுப்பூதிய பணியாளர்களுக்கு, சம்பளத்தை உயர்த்தும் போது, பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கும், சம்பளம் உயர்த்தி வழங்கப்பட்டது.

இம்மாதம், 'சமக்ரா சிக் ஷா' தொகுப்பூதிய பணியாளர்களுக்கு, 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க, ஒருங்கிணைந்த கல்வி மாநில திட்ட இயக்குனர், இம்மாதம், 16ம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.எனவே, பகுதி நேர ஆசிரியர்களுக்கும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; காலதாமதம் செய்ய வேண்டாம்.இவ்வாறு, செந்தில்குமார் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES