முதல்வர் கணினி தமிழ் விருது பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவரை ஊக்குவிக்கும் வகையில் 2013-ம் ஆண்டு முதல், முதலமைச்சர் கணினித் தமிழ் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருதுத் தொகையாக ரூ.1,00,000 ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.
இவ்வகையில் 2016-ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் டிசம்பர் 31 என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தற்போது, இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் (www.tamilvalarchithurai.org) விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில், தமிழ் வளர்ச்சிக்காக, சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குவோரை ஊக்குவிக்கும் வகையில், மென்பொருள் தயாரித்த, தனி நபர் மற்றும் நிறுவனத்திற்கு, 'முதல்வர் கணினித் தமிழ் விருது' வழங்கப்படுகிறது.விருது பெறுபவருக்கு, விருது தொகையாக, 1 லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.
விருதுக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருட்கள், 2017, 18, 19ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள், 'தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்சாலை, எழும்பூர், சென்னை -- 8' என்ற முகவரிக்கு, டிச., 31க்குள் வந்தடைய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 -- 28190412, 28190413 என்ற தொலைபேசி எண்களை, தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE