Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

25 November 2020

நிவர் புயல் கவிஞர் வைரமுத்து கவிதை




ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்? போ புயலே.. போய்விடு.. - நிவர் புயல் வைரமுத்து கவிதை..


நிவர் புயல் மக்களுக்கு எந்த வித சேதத்தையும் விளைவிக்காமல் கரையை கடந்து விட வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தனது கவிதையில் கூறியுள்ளார்.




வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல், கடலூரில் இருந்து 240 கி.மீ, சென்னையில் இருந்து 300 கி.மீ, தொலைவில் உள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் என்று கணித்திருக்கிறது வானிலை மையம். இந்நிலையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக, புதுச்சேரி அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.


இன்று இரவோ அல்லது நாளை அதிகாலையிலோ காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நிவர் புயல் கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.



“போ புயலேபோய்விடு

பச்சைமரம் பெயர்த்துப்
பல் துலக்காமல்

வேய்ந்தவை பிரித்து
விசிறிக் கொள்ளாமல்

குழந்தையர் கவர்ந்து
கோலியாடாமல்

பாமர உடல்களைப்
பட்டம் விடாமல்

சுகமாய்க் கடந்துவிடு
சுவாசமாகி விடு

ஏழையரின்
பெருமூச்சை விடவா நீ
பெருவீச்சு வீசுவாய்?”

இவ்வாறு கவிஞர் வைரமுத்து நிவர் புயலுக்காக கவிதை வடித்துள்ளார்.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES