நவம்பர் 16 அன்று பள்ளிகள் திறக்கப்படாது எனவும், இது தொடர்பாக மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை பள்ளிகள் திறக்கப்படாது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பாக பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
பின்னர் அமைச்சர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர்
எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பதாக தமிழக அரசு இன்று (நவம்பர் 12) காலை அறிவித்துள்ளது.
இது மாணவர்கள், பெற்றோர்களுக்கு மிகவும் நிம்மதியூட்டும் அறிவிப்பாக அமைந்துள்ளது.
ஏனெனில் கொரோனா அச்சத்தால் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப மனமின்றி பெற்றோர்கள் இருந்து வந்தனர். இந்த சூழலில் தமிழக அரசின் அறிவிப்பு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் முழுவதும் கட்டுக்குள் வரட்டும். அதன்பிறகு பள்ளிகள் திறப்பு பற்றி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE