அதனை நீங்களும் பார்த்திருக்கலாம்.
இந்த எண்கள் மிகவும் முக்கியமானவை என்பது நமக்குத் தெரியும்.
ஆனால், அதன் அருகில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் எதைக் குறிக்கின்றன? என்பது பல பேருக்குத் தெரியாது. அதற்காகத்தான் இந்தப் பதிவு :
1. ந.க எண் என்றால், நடப்புக் கடித எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
2. ஓ.மு. எண் என்றால், ஓராண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
3. மூ.மு எண் என்றால் மூன்றாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
4. நி.மு. எண் என்றால் நிரந்தர முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
5. ப.மு. எண் என்றால், பத்தாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்.
6. தொ.மு எண் என்றால், தொகுப்பு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
7.ப.வெ எண் என்றால் பருவ வெளியீடு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
8. நே.மு.க எண் என்றால், நேர்முகக் கடித எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்
மேற்கண்ட வார்த்தைகளில் ந.க.எண் (நடப்புக் கணக்கு எண்) மட்டுமே அதிகப் பயன்பாட்டில் இருக்கும்.
நேர்முகக் கடிதம் என்பது, கீழ்மட்ட அலுவலருக்கு, மேல்மட்ட அதிகாரி எழுதும் கடிதம் ஆகும். இது நேரடியாகப் பேசியதற்குச் சமம் என்பதால், அதற்கான பதிலை கீழ்மட்ட அலுவலர் விரைந்து அளிக்க வேண்டும்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE