அருந்ததி ராய் எழுதிய புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி கூறியதாவது:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததி ராயின் Walking with the Comrades என்ற புத்தகம் நீக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. எதிர்ப்பையடுத்து எம்.ஏ. ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இருந்து புத்தகம் நீக்கப்பட்டுள்ளது.
மாவோயிஸ்ட், நக்சலைட்டுகளின் பகுதிகளுக்கு சென்ற அனுபவம் குறித்து அருந்ததி ராய் புத்தகத்தில் எழுதியிருந்தார்.
எதிர்ப்பு எழுந்ததால் சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு புத்தகம் நீக்கப்பட்டது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE