தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக தினசரி 2 ஆயிரத்திற்கும் குறைவான தொற்றுகள் மட்டுமே பதிவாகி வருகிறது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1,707 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,64,989 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 66,365 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,10,49,131 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக இன்று சென்னையில் 471 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,10,601 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 149 பேருக்கும், திருவள்ளூரில் 138 பேருக்கும் செங்கல்பட்டில் 119 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று கொரோனா குணமடைந்து 2,251 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 7,39,532 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் 13,907 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று தனியார் மருத்துவமனையில் 7 பேர், அரசு மருத்துவமனையில் 12 பேர் என 19 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 11,550 ஆக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE