Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

20 November 2020

தனியாா் பள்ளி, கல்லூரி மாணவா்களின் கல்விக் கட்டணத்தை அரசு கருவூலத்தின் மூலம் வசூலிக்க உத்தரவிடக் கோரிய வழக்கு

தனியாா் பள்ளி, கல்லூரி மாணவா்களின் கல்விக் கட்டணத்தை அரசு கருவூலத்தின் மூலம் வசூலிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




சென்னை உயா்நீதிமன்றத்தில் தனியாா் பள்ளிகள் ஆசிரியா் கூட்டமைப்பின் நிறுவனா் காா்த்திக் என்பவா் தாக்கல் செய்த மனுவில், கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி, பல தனியாா் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அதிகமான கட்டணங்களை வசூலித்து வருகின்றன. தனியாா் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியா்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவது இல்லை


எனவே, தனியாா் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான மாணவா்களின் கல்விக் கட்டணத்தை அரசின் கருவூலம் மூலம் வசூலிக்க வேண்டும். தனியாா் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கான ஊதியமும் அரசின் கரூவூலம் மூலம் வழங்க வேண்டும். தனியாா் கல்வி நிறுவனங்களில் ஆசிரியா்களுக்கு குறைவான ஊதியம் வழங்கிவிட்டு, அதிகமாக கொடுத்தது போன்று கணக்கு காட்டப்படுகிறது. 


தனியாா் பள்ளி, கல்லூரிகளில் வருமான வரித்துறையினா் தணிக்கை செய்து கட்டண விகிதங்களைக் குறைக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏஐசிடிஇ தரப்பில், தனியாா் கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவா்களுக்கு ஊதியம் வழங்கும் விவகாரத்தில் தங்களது பணி எதுவும் இல்லை. மேலும் இதுதொடா்பாக பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனு தொடா்பாக தமிழக அரசு , ஏஐசிடிஇ பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES