உலக ஆண்கள் தினம்
சர்வதேச பெண்கள் தினத்தை உலகமே சேர்ந்து கொண்டாடும். ஆனால், ஆண்கள் தினம் என்ன தேதியென்று இங்கு நிறைய ஆண்களுக்கே தெரிவதில்லை. அந்த அளவிற்கு இருக்கிறது ஆண்களின் நிலைமை என்கிறார்கள் சில ஆண்கள்.
International Men’s Day
உலகில் உள்ள ஆண்களை கௌரவப்படுத்தும் விதமாகவும், ஆண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருதியும் ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
இச்சமூகத்தில் ஆண்களின் பங்கு என்பது மிகமிக முக்கியம். மகத்தான பல தியாகங்களை குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் செய்து வரும் ஆண்களின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் அதை நினைவுபடுத்தும் நாளாக விளங்குகிறது.
சர்வதேச ஆண்கள் தினம்
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 ஆம் தேதி உலக ஆண்கள் தினம் (International Men's Day) கொண்டாடப்பட்டு வருகிறது. 1999 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் உள்ள ட்ரினிடாட் & டொபாகோவில் இது தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இந்த தினம் விளங்குகிறது. உலகெங்கிலும் 60 நாடுகளில் ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா, ஹங்கேரி போன்றவற்றை உள்ளடக்கிய உலகின் 70 க்கும் மேற்பட்ட நாடுகளால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE