வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில்...
வானிலை மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் முழுதும், இன்று முதல், 14ம் தேதி வரை, பரவலாக இடி, மின்னலுக்கு வாய்ப்பு உள்ளது.தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், இன்று இடியுடன் கூடிய கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யலாம்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை போன்ற டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும், நாளை கன, மிக கனமழை பெய்யும். மற்ற இடங்களில் மிதமான மழை பெய்யும்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE