
தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1. மீன்வளத்துறை இயக்குநரும், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநராகவும் இருந்த சமீரன், தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநராகவும் (பொறுப்பு) இருந்த வி.விஷ்ணு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை இணை ஆணையராக இருந்த மதுசூதனன் ரெட்டி, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியத்தின் இயக்குநராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் இணை செயலாளராக இருந்த ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7. தேசிய சுகாதார திட்டத்தின் திட்ட இயக்குநராக இருந்த செந்தில் ராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8. சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயகாந்தன், மீன்வளர்ச்சித்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
9. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
10. தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த அருண் சுந்தர் தயாளன்.சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
11. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷில்பா பிரபாகர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
12. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த கந்தசாமி, இ-சேவைகளின் குறைதீர் அமைப்பின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
13. ஜெஸிந்தா லசாரஸ், அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
14. திவ்யதர்ஷினி சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்".
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE