நிவர் புயலால் மனித உயிரிழப்புகள் எதுவும் இல்லாமல் முன்னெச்சரிக்கையுடன் சிறப்பாக செயல்பட்ட வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களை முதலமைச்சர் பழனிசாமி பாராட்டினார்.
நிவர் புயல் பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக பேசினார். இதில், நிவர் புயல் பாதிப்பில் இருந்து மனித உயிரிழப்புகள் எதுவும் நிகழாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்ட வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களை முதலமைச்சர் பழனிசாமி பாராட்டினார்.
மேலும், வேலூர் மாவட்டம் கவுன்டன்யா ஆற்றில் இரவு நேரத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க துரிதமாக செயல்பட்டதற்காக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தை பாராட்டினார்.
வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சூழலில் நிலைமையை பெரும் பாதிப்பின்றி சிறப்பாக கையாண்டதாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களை முதலமைச்சர் பழனிசாமி பாராட்டினார். மேலும் அரசின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE