FILE PHOTO |
சென்னை:மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்த போராட்டத்திற்கு, தமிழகத்தில் பெரிதாக யாரும் ஆதரவு தராததால் பிசுபிசுத்தது.
தொழிலாளர் நலச்சட்ட திருத்தம், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு, பழைய ஓய்வுதிய திட்டம் மீண்டும் நடைமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்கள், நேற்று நாடு தழுவிய போராட்டம் அறிவித்து இருந்தன.
இந்த போராட்டத்தில் பங்கேற்கக்கூடாது; விடுப்பு எடுக்காமல், தமிழக அரசு ஊழியர்கள் பணிக்கு வரவேண்டும் என, தலைமை செயலர் சண்முகம் உத்தரவிட்டு இருந்தார்.
போராட்டத்தில் பங்கேற்கும், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்றும், எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே, நிவர் புயல் காரணமாக, மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.இதனால், நாடு முழுவதும் நேற்று நடந்த போராட்டம், தமிழகத்தில் பிசுபிசுத்தது. அரசின் உத்தரவை செயல்படுத்தும் வகையில், போராட்டங்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்கவில்லை.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE