கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இளநிலை வேளாண் பட்டப்படிப்புகளுக்கான கவுன்சிலிங் கட்டணம் செலுத்தவும் விண்ணப்பத்தில் திருத்தம் செய்யவும் மூன்று நாட்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கைத்துறை தலைவர் கல்யாணசுந்தரம் கூறியதாவது:தமிழ்நாடு வேளாண் பல்கலை இளநிலை படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பதாரர்கள் முன்னுரிமை மற்றும் மதிப்பெண் அடிப்படையில் பட்டியலிட்டு பல்கலை தயார் நிலையில் வைத்துள்ளது.
கலந்தாய்வுக்காக மாணவர்கள் விண்ணப்பத்தில் தகவல்களில் குறைபாடு இருப்பின் இன்று முதல் நவ.29ம் தேதி வரை மாணவர்கள் குறிப்பிட்டுள்ள கல்லுாரி மற்றும் இடம் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாணவர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்துள்ளோம்.விண்ணப்பித்த தகவல்களில் மாற்றம் செய்ய நவ. 29 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE