மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகளில் முக்கியமானது வாட்ஸ்அப். அதனால் பயனர்களை மேலும் கவரும் வகையில் அடிக்கடி அப்டேட் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இதனை பயன்படுத்தி ஆன்லைன் விற்பனையில் ஈடுபடும் வகையில் பிசினஸ் கணக்குகளையும் ஆரம்பித்துக் கொள்ளலாம். இதில் நீங்கள் விற்கும் பொருட்கள் பற்றி பயனர்களுக்கு தெரிவிக்கலாம். இதில் தற்போது ஒரு முக்கிய அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பயனர்கள் ஷாப்பிங் செய்வதை மேலும் எளிதாக்கும் வகையில் தற்போது "Shopping button' வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் Chat திரையிலேயே இதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். வாய்ஸ் கால் ஆப்ஷனுக்கு அருகில் இந்த பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் தொடும் போது, அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் விவரங்கள் மற்றும் அவர்கள் விற்பனை செய்யும் பொருட்கள், விலை பற்றிய முழு தகவல்களும் வரும்.
தனிப்பட்ட முறையில் பொருட்களின் விவரங்களை அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது. இதன்மூலம் நேரம் சேமிக்கப்படுவது மட்டுமல்லாமல், என்னென்ன பொருட்கள் உள்ளது என்பதை வாடிக்கையாளர்களே பார்த்து தெரிந்து கொண்டு, விருப்பம் உள்ளதை கேட்டு வாங்கிக் கொள்ள முடியும். மற்றவர்களுக்கு Chat செய்யும் போது இந்த ஆப்ஷன் உங்களுக்கு திரையில் காண்பிக்காது.
உலகளவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயன்படுத்தும் அனைவருக்கும் இந்த அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்கள் முன்னர்தான், இந்தியாவில் வாட்ஸ்அப் பே (WhatsApp Pay) அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE