கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதியுங்கள் என தெலங்கானா அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பதாலும், வெடிப்பதாலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக வாய்ப்புள்ளதாக ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்கள் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடைவிதித்துள்ளன. பல மாநிலங்கள் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.
இந்நிலையில் தெலங்கானா மாநில உயர்நீதிமன்றம் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்க வேண்டும் என அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. நாளை ஒருநாள் மட்டுமே இடையில் இருக்கும் நிலையில் கோர்ட் உத்தரவை தெலங்கானா அரசு கடைபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தன்று இரவு 11.55 முதல் 12.30 வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE