‘வரும் 29-ந் தேதி தீப திருவிழா அன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதேபோல, அதற்கு முந்தைய நாளான 28-ந்தேதியும் அனுமதி இல்லை.
பிற நாட்களில், காலை8 மணி முதல் மாலை 6 மணி வரை, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் 800 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி அவர்கள் அனுமதிக்கப்படுவர். கொரோனா காரணமாக தேர் திருவிழா கோவில் வளாகத்துக்குள் நடத்தப்படும்’ என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், தேர் திருவிழாவை கோவில் வளாகத்துக்குள் நடத்தாமல், கோவிலைச் சுற்றியுள்ள 4 மாடவீதிகளில் நடத்த வேண்டும். உற்சவர் மாடவீதிகளில் வலம் வருவதுதான் இந்த திருவிழாவின் முக்கிய நோக்கம் என வாதிடப்பட்டது.
அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம்தான் முடிவெடுக்க முடியும் என்பதால், ஐகோர்ட்டு தலையிட முடியாது” எனக் கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE