கொரோனா பிரச்சினை காரணமாக பெரும்பாலானவர்கள் ஆன்லைன் மூலம் வேலை பார்ப்பதால் பலர் நீண்ட நேரம் தொடர்ச்சியாக ‘இயர்போன்’ பயன்படுத்துகின்றனர்.
அதிக நேரம் ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் காதுகளில் பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் பணியாற்றி வருகின்றனர். ஆன்லைன் மூலம் வேலை பார்ப்பதால் பலர் நீண்ட நேரம் தொடர்ச்சியாக ‘இயர்போன்’ பயன்படுத்துகின்றனர்.
இதன்காரணமாக கடந்த 8 மாதங்களில் காதுகளில் பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மும்பை ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரி காது, மூக்கு, தொண்டை சிறப்பு டாக்டர் ஸ்ரீனிவாஸ் சவான் கூறியதாவது:-
அதிக சத்தத்துடன் நீண்ட நேரம் ‘இயர்போன்‘ பயன்படுத்துவதால் காதுகளில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. தினந்தோறும் காதுகளில் பிரச்சினையுடன் 5 முதல் 10 பேர் வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் 8 மணி நேரங்களுக்கு மேல் ‘இயர்போன்’ அணிந்தபடி பணியாற்றுபவர்கள் ஆவர். அதிக நேரம் ‘இயர்போன்’ பயன்படுத்துவது காதுகளுக்கு அதிகஅழுத்தத்தை கொடுக்கிறது.
சுத்தம் இல்லாத இயர்போட்ஸ், இயர்-பிளக்ஸ்களை பயன்படுத்தும் போது அது காதில் நோய் தொற்றை ஏற்படுத்தும். மேலும் அதிக சத்தம் வைத்து நீண்ட நேரம் ‘இயர்போன்’ பயன்படுத்துவது கேட்கும் திறனை குறைக்கும். இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளாதவர்களுக்கு நிரந்தர பாதிப்புகளும் ஏற்படும் அபாயமும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தடுக்க என்ன செய்யலாம்?
மேலும் காதுகளில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கு நிபுணர்கள் கூறியதாவது:-
தொடர்ந்து அதிக நேரம் பயன்படுத்தாமல் இடைவெளிவிட்டு ‘இயர்போன்‘களை பயன்படுத்த வேண்டும். கணினி மற்றும் மடிக்கணினிகளில் உள்ள ஸ்பீக்கர்களை பயன்படுத்தலாம். பள்ளி மாணவர்கள் 60 டெசிபல் சத்தத்துக்கு மேல் ‘இயர்போன்‘ பயன்படுத்தினால் அது அவர்களின் காதுகளை நேரடியாக பாதிக்கிறது. இதேபோல் சுத்தம் இல்லாத இடங்களில் இயர்போன் உள்ளிட்ட சாதனங்களை வைக்க கூடாது. இயர்போன்களுக்கு பதிலாக ஹெட்போன்களை பயன்படுத்தலாம்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE