
பெண் குழந்தைகளின் இடைநிற்றலை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என, கல்வித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கைகள் தொடர்பாக கடலுாரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி பேசியது:மாவட்டத்தில் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் நீண்ட நாள் பிரச்னையாக உள்ளது. இதை தீர்க்க பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி, மாணவர்களின் கல்வி தொடர வழிவகை செய்ய வேண்டும்.பெண் குழந்தைகளின் இடைநிற்றலை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
ஏழ்மையால் இடை நிற்றல் பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.அரசு பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த வேண்டும். பள்ளி திறப்பதற்கு முன்னரே அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து சரியாக உள்ளதா என உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் சி.இ.ஓ., ரோஸ் நிர்மலா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE