வேலூர் அருகே பத்தலப்பல்லி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தனிமனித இடைவெளியுடன் குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது.
நாட்டின் முதல் பிரதமரான நேரு, தனது பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடக் கேட்டுக் கொண்டார். அதனால் அவர் பிறந்த நவம்பர் 14 ஆம் தேதி, நாடு முழுவதும் குழந்தைகள் தின விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழாக் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இவ்வாண்டு நேரு பிறந்த தினத்தன்று தீபாவளித் திருநாளும் வருவதால் பள்ளியில் ஒரு நாள் முன்னதாக இன்று (வெள்ளிக்கிழமை) குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
நேருவின் திருவுருவ படத்திற்குத் தலைமை ஆசிரியர் பொன்.வள்ளுவன், ஹேன்ட் இன் ஹேன்ட் திட்டத்தின் சிறப்பு ஆசிரியர் பொன்னரசி, பிற்படுத்தப்பட்ட நலத் துறை அணைக்கட்டு விடுதிக் காப்பாளர் பழனி, மாணவச் செல்வங்கள் மற்றும் பெற்றோர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் நேருவின் திருவுருவப் படம் முன்பாக பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்தனர். நேரு குறித்து மாணவர்களிடையே பேச்சு போட்டிகள் நடைப்பெற்றது. பேச்சுப் போட்டி மற்றும் நடனப் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வைத் தொடர்ந்து தீபாவளி குறித்து வாழ்த்துச் செய்திகளை குழந்தைகள் வரைந்து கொண்டுவந்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர். மாணவர்கள் முகக் கவசம் அணிந்து வந்து பாதுகாப்புடன் குழந்தைகள் தினவிழாவையும் தீபாவளித் திருநாளையும் கொண்டாடினர். தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இவ்விழா, தலைமை ஆசிரியர் பொன்.வள்ளுவன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE