தூத்துக்குடி: தீபாவளியை முன்னிட்டு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தூத்துக்குடி நீதிபதி தற்போது காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் அன்பளிப்பாக பட்டாசு, இனிப்பு வகைகளை வழங்க வேண்டாம்' அது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இதனை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தடுத்து நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். தீபாவளி பரிசு வழங்குவது தற்போது வரை நடைமுறையில் உள்ளது என்றாலும் கூட அவை சட்டப்படி தவறு என்பதை உணர்ந்து நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் பரிசுகள் வழங்குவதை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE