
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெயரில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அறிமுகபடுத்தப்படும் என கடந்த பட்ஜெட் கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். அதன்படி நவம்பர் 12ம்தேதியன்று (நாளை) காலை கலைஞர் கருணாநிதி பெயரிலான புதிய திட்டத்தின் தொடக்க விழாவை நடத்த அரசு முடிவெடுத்தது. இதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில் புதுச்சோி, காராமணிக்குப்பத்தில் உள்ள ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இதற்கான விழா திட்டமிட்டபடி நடக்கிறது.
இதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவில் திமுக அமைப்பு செயலாளரும், ராஜ்யசபா எம்பியுமான ஆர்.எஸ்.பாரதி கலந்து கொள்கிறார். புதுச்சேரி அரசு கொண்டுவரும் இந்த புதிய திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவாக கேசரி, 2 இட்லி, ெபாங்கல், தொட்டுக் கொள்வதற்கு சட்னி, சாம்பார் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை தொடர்ந்து புதுச்சேரி சட்டசபை எதிரே கலைஞருக்கு சிலை அமைக்கும் பணியையும் அரசு விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE